ஓடிடி தகவல் சேவைகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் வேண்டும் - சிஓஏஐ வலியுறுத்தல்

October 27, 2022

தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் சிஓஏஐ என்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்டு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப் போன்ற ஓவர் தி டாப் (ஓடிடி) தகவல் தொடர்பு சேவைகளுக்கு, தங்கள் நிறுவனங்களுக்கு இருக்கும் அதே விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வாய்ஸ் கால்கள் மற்றும் வீடியோ கால்கள் […]

தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் சிஓஏஐ என்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையதள இணைப்பை அடிப்படையாகக் கொண்டு தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப் போன்ற ஓவர் தி டாப் (ஓடிடி) தகவல் தொடர்பு சேவைகளுக்கு, தங்கள் நிறுவனங்களுக்கு இருக்கும் அதே விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாய்ஸ் கால்கள் மற்றும் வீடியோ கால்கள் போன்ற வசதிகளை தகவல் தொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதே சேவைகளை வாட்ஸ் அப் போன்ற ஓடிடி தகவல் தொடர்பு அமைப்புகளும் வழங்குகின்றன. ஆனால், தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், ஓடிடி நிறுவனங்களுக்கு விதிக்கப்படவில்லை. எனவே, இரு பிரிவுகளும் வழங்கும் சேவைகள் ஒரே மாதிரியாக இருக்கும் போது, விதிமுறைகளும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட வேண்டும் என்று சிஓஏஐ அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

சாதாரண தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு, அந்தந்த நிறுவனங்கள், அலைக்கற்றையை அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்க வேண்டும். அத்துடன், வெவ்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் இடையே தகவல் இணைப்புகளை கொடுப்பதற்காக, அந்தந்த நிறுவனங்களுக்கு உரிமைத் தொகை செலுத்த வேண்டும். அத்துடன், தகவல் தொடர்பு சேவைகளுக்கான உரிமங்களை பெறுவதற்கு அரசாங்கத்திடம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இதே போன்ற சேவைகளை வழங்கும் ஓடிடி தளங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அவர்கள் அதிக விலை கொடுத்து அலைக்கற்றையை ஏலம் எடுக்க வேண்டியதில்லை. மேலும், பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் இணைப்புகளை வழங்குவதற்கு உரிமைத் தொகை செலுத்த வேண்டியதில்லை. அத்துடன், இந்த சேவைகளுக்கான உரிமங்களை அரசிடம் பெற வேண்டியதில்லை.

இவ்வாறு, ஒரே மாதிரியான சேவைகளுக்கு இங்கு வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. இதனால், தகவல் தொடர்பு சந்தையில் ஓடிடி மற்றும் சாதாரண தகவல் தொடர்பு நிறுவனங்கள் இடையே சம வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண தகவல் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்குவதற்கு அதிகமான விலை கொடுக்க வேண்டி உள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் கட்டமைக்கும் தொழில்நுட்ப வசதிகள் மூலம் இணையத்தின் துணைக் கொண்டு இயங்கும் ஓடிடி தளங்கள், எந்தவித செலவுகளும் இல்லாமல் இயங்குகின்றன. இது சாதாரண தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில், ஓடிடி மற்றும் சாதாரண தகவல் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ஒரே மாதிரியான சேவைகளுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று சிஓஏஐ அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu