தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்துள்ளது.
விதிகளை மீறி அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தொழில் அதிபர்கள் ஆங் பெங் செங் மற்றும் லும் காக் செங் ஆகியோருக்கு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சலுகைகள் அளித்தது போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இதனால், அரசுத் தரப்பு அவற்றைப் முன்னெடுக்கப்போவதில்லை என்பதாக ஊடகங்கள் கூறியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், அமைச்சர் ஒருவருக்கு எதிராக ஊழல் வழக்கு நடைபெறுவது இது முதன்முறையாகும்.