2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டுள்ள நிலையில் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஓங் யே குங் கூறுகையில், 'கடந்த ஆண்டை போல இன்னொரு கொரோனா அலை இங்கு வரலாம். எனவே முக கவசம், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.














