சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிட்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் டென்மார்க் வீரருடன் மோதினார். இதில் 13- 21, 21-16,13-21 என்ற நேர்செட் கணக்கில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஜப்பான் வீரருடன் மோதினார். இதில் 4-21 என முதல் செட்டை இழந்தார். இரண்டாவது செட்டில் 3-1 என பின்தங்கி இருந்த நிலையில் காயத்தின் காரணமாக வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் 2 சுற்றுகளில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வெளியாகி உள்ளனர்













