உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய விமான நிலையங்கள் இடம்பிடிப்பு

April 18, 2024

ஸ்கைட்ராக்ஸ் என்ற பிரிட்டன் நிறுவனம் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்து வந்தது. இந்த வருடம் இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது. முதல் இடத்தில் தோகாவின் ஹமாத் விமான நிலையம் உள்ளது. தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன. மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான […]

ஸ்கைட்ராக்ஸ் என்ற பிரிட்டன் நிறுவனம் உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்து வந்தது. இந்த வருடம் இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது. முதல் இடத்தில் தோகாவின் ஹமாத் விமான நிலையம் உள்ளது. தென் கொரியாவின் சியோல் இஞ்சியோன் விமான நிலையம் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் 3 மற்றும் 4 ஆம் இடங்களில் உள்ளன. மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து 4 விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.

சாங்கி விமான நிலையம் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து, தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும், ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகிலேயே சிறப்பான குடிநுழைவு சேவைகளை வழங்கும் விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து, டெல்லி விமான நிலையம், மும்பை விமான நிலையம், பெங்களூரு விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம் ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. டெல்லி 36, மும்பை 95, பெங்களூரு 59 மற்றும் ஹைதராபாத் 61 ஆகிய இடங்களில் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu