அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது செபி

இந்திய பங்குச் சந்தை நடவடிக்கைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி, அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை அண்மையில் வெளியானது. அதில், கடந்த காலாண்டில் 2 சோக்காஸ் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி சொலுஷன்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களும் சோகாஸ் நோட்டீஸ் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளன. தொடர்ந்து, இந்த […]

இந்திய பங்குச் சந்தை நடவடிக்கைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி, அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை அண்மையில் வெளியானது. அதில், கடந்த காலாண்டில் 2 சோக்காஸ் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி சொலுஷன்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களும் சோகாஸ் நோட்டீஸ் கிடைக்கப் பெற்றதாக தெரிவித்துள்ளன. தொடர்ந்து, இந்த நோட்டீஸ்களால் நிறுவனத்தின் வர்த்தக நிலைமை மாற்றம் பெறாது என அதானி குழுமம் தெளிவுபடுத்தி உள்ளது. ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கு பிறகு அதானி குழுமத்தின் பண பரிமாற்றங்களின் வெளிப்படை தன்மையை செபி விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu