விண்வெளியில் 6 கோள்கள் ஒத்திசைவுடன் இருப்பது கண்டுபிடிப்பு

December 1, 2023

பூமியிலிருந்து வெகு தொலைவில் நெப்டியூன் போன்ற 6 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் ஒத்திசைவுடன் சுற்றி வருவதாக கண்டறிந்துள்ளனர். இது மிகவும் அரிய வானியல் நிகழ்வாகும். பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், HD110067 என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரம் உள்ளது. இது நம் சூரியனை விட 20% சிறியதாகும். இதனைச் சுற்றி வரும் 6 கோள்கள், ஒத்திசைவுடன் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு இதே முறையில் அவை சுற்றி வருகின்றன. […]

பூமியிலிருந்து வெகு தொலைவில் நெப்டியூன் போன்ற 6 கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் ஒத்திசைவுடன் சுற்றி வருவதாக கண்டறிந்துள்ளனர். இது மிகவும் அரிய வானியல் நிகழ்வாகும்.

பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தொலைவில், HD110067 என பெயரிடப்பட்டுள்ள நட்சத்திரம் உள்ளது. இது நம் சூரியனை விட 20% சிறியதாகும். இதனைச் சுற்றி வரும் 6 கோள்கள், ஒத்திசைவுடன் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு இதே முறையில் அவை சுற்றி வருகின்றன. இது ஒரு கணித அதிசயம் என விஞ்ஞானிகள் வியந்துள்ளனர். இந்த 6 கிரகங்களும் பூமியை போல் அல்லாமல் அதிக பாறைகளைக் கொண்டதாக இருக்கும் எனவும், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் நிரம்பிய வளிமண்டலத்தை கொண்டு இருக்கலாம் எனவும், விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த கிரகங்கள் பூமியின் விட்டத்தை விட 2 - 3 மடங்கு பெரிய கோள்கள் தான்; ஆனால் நெப்டியூன் கிரகத்தை விட சிறியதாக இருக்கிறது என கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu