தென் ஆப்பிரிக்க தங்க சுரங்கத்திற்குள் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஸ்டில்போன்டைன் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தங்க சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் தங்கம் அகற்றுவதற்காக சுரங்கத்திற்கு சென்ற போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளனர். இதையடுத்து, போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சுரங்கத்திற்குள் சிக்கியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த சம்பவத்தில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் அவர்களது உடல்களை மீட்டுள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கானதாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.