அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தை சூறாவளி புயல் தாக்கியதில் ஆறு பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் சூறாவளி புயல் தாக்கியது. இதனால் பலத்த மழை பெய்தது. இந்த புயலால் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள், மின்கம்பிகள் சரிந்து விழுந்தன. இந்த புயல் மழைக்கு ஆறு பேர் பலியாகினர். சுமார் 23 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த புயல் காரணமாக அந்த மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 85 ஆயிரம் குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த இடங்களை விட்டு மக்கள் வெளியேற இயலாமல் தவிக்கின்றனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள்.














