அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அதில், வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா மாகாணத்தில் கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகளின் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினராக உருவாகியுள்ளார். அவர், குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்து வெற்றி பெற்றார். மேலும், இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகியவர்கள், மீண்டும் வெற்றி பெற்று தங்களுடைய பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர்.