ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், நேற்று தனது 3டி பிரிண்டட் கிரயோஜெனிக் என்ஜின் சோதனையை நிகழ்த்தியுள்ளது. சுமார் 200 வினாடிகளுக்கு இன்ஜின் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின், நிறுவனத்தின் கனரக வாகனமான விக்ரம் 2 ராக்கெட்டின் பாகமாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு தவான் 2 என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில், தனது முதல் விண்வெளி திட்டத்தை ஸ்கைரூட் செயல்படுத்தியது. தற்போது, இந்த வருட இறுதிக்குள், தனது முதல் விண்வெளி சுற்றுவட்ட பாதை பயணத்தை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் பகுதியாக இந்த சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சோதனை வெற்றியடைந்தது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இவ்வருட இறுதிக்குள் இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், தெற்காசியாவை சேர்ந்த முதல் தனியார் விண்வெளித் திட்டமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.