சுலோவேகியா பிரதமர் உடல் நலம் தேறினார்

May 31, 2024

சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும் பாதுகாப்பு துறை மந்திரிமான ராபர்ட் கலீனா கூறியுள்ளார்.. சுலோவேகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மர்ம நபர் ஒருவரால் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

சுலோவேகியா பிரதமர் ராபர்ட் பிகோ நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும் பாதுகாப்பு துறை மந்திரிமான ராபர்ட் கலீனா கூறியுள்ளார்..

சுலோவேகியாவின் பிரதமர் ராபர்ட் பிகோ கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மர்ம நபர் ஒருவரால் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக துணை பிரதமரும் பாதுகாப்பு துறை மந்திரிமான ராபர்ட் கலீனா கூறியுள்ளார். இருந்தபோதும் முழுமையாக குணமடைய நீண்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu