சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதங்களில் மாற்றமில்லை

January 2, 2025

சிறுசேமிப்பு திட்டங்களில் பழைய வட்டிவிகிதங்களே தொடரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு. வங்கிகள் மற்றும் தபால் சேவை நிலையங்களில் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம், மத்திய அரசின் மூலம் 3 மாதம் தோறும் புதுப்பிக்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் முதல் பங்கான நிதி காலாண்டுக்கான வட்டிவிகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, சிறு சேமிப்பு திட்டங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நடைமுறையில் […]

சிறுசேமிப்பு திட்டங்களில் பழைய வட்டிவிகிதங்களே தொடரும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு.

வங்கிகள் மற்றும் தபால் சேவை நிலையங்களில் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம், மத்திய அரசின் மூலம் 3 மாதம் தோறும் புதுப்பிக்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் முதல் பங்கான நிதி காலாண்டுக்கான வட்டிவிகிதம் பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, சிறு சேமிப்பு திட்டங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நடைமுறையில் இருந்த வட்டிவிகிதங்கள் அப்படியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2%, தேசிய சேமிப்பு பத்திரத்திற்கு 7.7%, மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.5% என்ற பழைய வட்டி விகிதங்கள் தொடரும். இதன் மூலம், கடந்த காலங்களாக சேமிப்பு திட்டங்களில் வட்டிவிகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu