ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்களுக்கான ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான சர்வதேச டெண்டர் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதானி நிறுவனம் கோரிய தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமானதையாலேயே இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த திட்டத்தின் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படக்கூடும் என்ற செய்தியுடன் எதிர்க்கட்சிகள் பெரும் கண்டனங்களை தெரிவித்தன.