3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரை வழங்கினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்புடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று அவர் கூறினார்.