ஸ்மார்ட் ஏவுகணை பரிசோதனை வெற்றி

ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு படைகளுக்கான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அதை தொடர்ந்து இந்த ஏவுகணைகள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டார்பிடோ என்ற ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை நேற்று ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் பரிசோதனை செய்தனர். இது சூப்பர்சானிக் […]

ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு படைகளுக்கான ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. அதை தொடர்ந்து இந்த ஏவுகணைகள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டார்பிடோ என்ற ஸ்மார்ட் ஏவுகணை அமைப்பை நேற்று ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் பரிசோதனை செய்தனர். இது சூப்பர்சானிக் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை அமைப்பின் வேக கட்டுப்பாடு உள்பட பல அதிநவீன வழிமுறைகள் சரிபார்க்கப்பட்டது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை இந்திய கடற்படை திறனை மேலும் அதிகரிக்கும் என டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu