அமெரிக்காவில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இதனை ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தி ரத்த அழுத்தத்தை அளவிடலாம். இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.














