ஸ்னாப்சாட் அறிமுகம் செய்த 'மை ஏஐ' சாட்பாட்

ஸ்னாப்சாட் நிறுவனம், மை ஏஐ என்ற பெயரில், புதிய சாட்பாட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. வரும் வாரத்தில், இந்த கருவி வெளியிடப்படும் என்று தனது அதிகாரப்பூர்வ வலைபக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சாட்பாட் கருவி, நெருங்கியவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம்?, வார இறுதியில் எங்கு சுற்றுலா செல்லலாம்?, இரவுக்கு என்ன சமைக்கலாம்? போன்றவற்றுக்கு யோசனை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் கவிதையும் எழுத முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜிபிடி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. […]

ஸ்னாப்சாட் நிறுவனம், மை ஏஐ என்ற பெயரில், புதிய சாட்பாட் கருவியை அறிமுகம் செய்துள்ளது. வரும் வாரத்தில், இந்த கருவி வெளியிடப்படும் என்று தனது அதிகாரப்பூர்வ வலைபக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சாட்பாட் கருவி, நெருங்கியவர்களுக்கு என்ன பரிசளிக்கலாம்?, வார இறுதியில் எங்கு சுற்றுலா செல்லலாம்?, இரவுக்கு என்ன சமைக்கலாம்? போன்றவற்றுக்கு யோசனை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் கவிதையும் எழுத முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஜிபிடி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை அம்சமாக, ஸ்னாப்சாட் பிளஸ் பயனர்களுக்கு மட்டும் இது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்சாட் பிளசுகான மாத சந்தா கட்டணம் 3.99 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சாட்பாட்டை, தனிப்பட்ட முறையில் பயனர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சாட்பாட்டின் பெயர், வால்பேப்பர் உள்ளிட்டவைகளை தங்களுக்கு ஏற்றவாறு பயனர்கள் அமைத்துக் கொள்ளலாம். மேலும், பயனர்களுக்கும் சாட்பாட் கருவிக்கும் இடையிலான உரையாடல் சேமிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu