ஸ்னாப் சாட் சமூக ஊடக தளத்தின் தாய் நிறுவனம் ஸ்னாப் ஐ என் சி ஆகும். இந்த நிறுவனம் தனது 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 540 பேர் வேலை இழக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. விளம்பர வருவாயில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதனை ஈடுகட்டும் விதமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக ஸ்னாப் ஐஎன்சி தெரிவித்துள்ளது.
நிகழாண்டில் பணி நீக்கத்தை அறிவித்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையில் ஸ்னாப் ஐஎன்சி நிறுவனம் இணைந்துள்ளது. நிறுவனத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக பல்வேறு பணி இழப்புகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க சந்தையில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்து வருகிறது.