தென்கொரியாவில் குளிர்காலம் தற்போது தொடங்கியுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை கடும் குளிர் நிலவுகின்றது. குவாங்கன், வடக்கு சங்சியாங், வடக்கு ஜிலாங் ஆகிய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் வலுப்பெற்றதால், சியோல் மற்றும் இன்ஞ்சியான் போன்ற நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை -2°C ஐ கடந்துள்ளது. இதனால், சியோல் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.