மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட தொகை குறித்து மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்கள், மேம்படுத்தப்பட்ட (ஊரக மற்றும் நகர்ப்புற) ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது.