மகா கும்பமேளா குறித்த தவறான தகவல் பரப்பிய 53 சமூக ஊடக கணக்குகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இதுவரை 50 கோடிக்கு மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த விழாவுக்கான சூழலில், மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். சில சமூக ஊடக கணக்குகள், கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து உள்ளிட்ட பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கணக்குகளில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.