அண்மையில், ஜப்பானை சேர்ந்த சாஃப்ட் பேங்க் நிறுவனம், ஜொமாட்டோ பங்குகளை விற்று உள்ளது. இதன் விளைவாக, இன்றைய தொடக்க நேர வர்த்தகத்தில், ஜொமாட்டோ பங்குகள் கிட்டத்தட்ட 5% வரை உயர்ந்து வர்த்தகமானது.
அண்மையில் நடந்த பிளாக் டீல் பரிவர்த்தனையில், கிட்டத்தட்ட 10 கோடி ஜொமாட்டோ நிறுவன பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்றுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பில் 1.17% ஆகும். அடிப்படையில், ஒரு பங்கு 94.7 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதன்படி, இந்த பங்கு விற்பனையின் மொத்த மதிப்பு 947 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் கிளையான Svf Growth Singapore Private limited, ஜொமேட்டோ பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 28ஆம் தேதி, டைகர் குளோபல் நிறுவனம் ஜொமாட்டோ பங்குகளை பிளாக் டீலில் விற்றது குறிப்பிடத்தக்கது.