பேடிஎம் நிறுவனத்தில் 2.17% பங்குகளை விற்ற சாஃப்ட் பேங்க் - பங்கு விலை 4% வீழ்ச்சி

February 29, 2024

ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாஃப்ட் பேங்க், பேடிஎம் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது. இன்று பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சாஃப்ட் பேங்க் குழுமம் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2.17% பேடிஎம் பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்பனை செய்துள்ளது. தொடர்ச்சியாக, பேடிஎம் பங்குகளை சாப்ட் பேங்க் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 செப்டம்பரில் 17.5% பங்குகளை கொண்டிருந்த சாஃப்ட் பேங்க், தற்போது வெறும் 2.83% பேடிஎம் பங்குகளை […]

ஜப்பானைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சாஃப்ட் பேங்க், பேடிஎம் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்பனை செய்துள்ளது.

இன்று பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சாஃப்ட் பேங்க் குழுமம் பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2.17% பேடிஎம் பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்பனை செய்துள்ளது. தொடர்ச்சியாக, பேடிஎம் பங்குகளை சாப்ட் பேங்க் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 செப்டம்பரில் 17.5% பங்குகளை கொண்டிருந்த சாஃப்ட் பேங்க், தற்போது வெறும் 2.83% பேடிஎம் பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. சாஃப்ட் பேங்க் நிறுவனத்தின் அண்மை விற்பனை குறித்த செய்தி வெளியான பின்னர், பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 4% வீழ்ச்சி அடைந்து, ஒரு பங்கு 391 ரூபாய் அளவில் வர்த்தகம் ஆகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu