பேடிஎம் நிறுவனத்தின் 2% பங்குகளை விற்ற சாஃப்ட் பேங்க்

July 19, 2023

சாஃப்ட் பேங்க் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இல் தனக்கு இருந்த 2% பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% க்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த மே 9ம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 12771434 பொது பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் […]

சாஃப்ட் பேங்க் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் இல் தனக்கு இருந்த 2% பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், பேடிஎம் நிறுவனத்தில் சாப்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% க்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த மே 9ம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட 12771434 பொது பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், பேடிஎம் நிறுவனத்தில் சாஃப்ட் பேங்க் பங்குகள் வெறும் 9.15% அளவில் எஞ்சியுள்ளன. கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை இந்த காலகட்டத்தில் சாஃப்ட் பேங்க் விற்று உள்ளது. கடந்த 2023 ஆம் தொடக்கம் முதலே, பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வரும் நிலையில், சாப்ட் பேங்க் அதனை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu