இந்தியாவில் சூரிய தகடுகள் அமைக்கும் பணி 47% வீழ்ச்சி

November 27, 2023

இந்தியாவில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் தகடுகளை நிறுவும் பணிகளில் 47% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 5.6 ஜிகாவாட் அளவில் சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% வீழ்ச்சியாகும். கடந்த 2022 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில், 10.5 ஜிகாவாட் அளவில் சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன. மேலும், நிகழாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வெறும் 1.9 […]

இந்தியாவில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் தகடுகளை நிறுவும் பணிகளில் 47% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 5.6 ஜிகாவாட் அளவில் சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% வீழ்ச்சியாகும். கடந்த 2022 ஆம் ஆண்டில், இதே காலகட்டத்தில், 10.5 ஜிகாவாட் அளவில் சூரிய மின் சக்தி தகடுகள் பொருத்தப்பட்டன. மேலும், நிகழாண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வெறும் 1.9 ஜிகாவாட் அளவில் மட்டுமே சூரிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், 34% சரிவாகும். சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டாலும், வளர்ச்சி குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu