பூமியை சூரிய புயல் தாக்குவது அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், நாசாவின் முயற்சியால், சூரிய புயல் பூமியை நேரடியாக தாக்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக அதனை கண்டறியும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தரவுகளை நவீன கணினிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டு ஆராய்ச்சி செய்து, சூரிய புயலை முன்கூட்டியே கண்டறிய முடியும் என நாசா கூறியுள்ளது.
சூரிய புயலின் போது, சூரியனிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த கதிர்கள் பூமியின் காந்தப்புலத்தை பாதிப்படைய செய்கின்றன. மேலும், சூரிய கதிர்கள் மிகவும் வேகமாக பூமியை நோக்கி பயணித்து தாக்குகின்றன. சூரிய புயலின் தாக்கத்தை பொறுத்து மின்னணு சாதனங்களின் பாதிப்பு உள்ளது. எனவே, நாசாவின் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.