சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சோனியா கட்சிப் பணிகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புதுடில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 'சுவாச தொற்று காரணமாக சோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்' எனக் கூறப்பட்டுள்ளது.