ஜப்பானை சேர்ந்த மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனம் சோனி ஆகும். இந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு, ஜீ பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இணைக்கப்பட இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இணைப்பு நிகழ்ந்தால், பொழுதுபோக்கு துறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜீ உடனான இணைப்பு நிகழாது என சோனி தெரிவித்துள்ளது. தங்களின் அனைத்துவித நிபந்தனைகளும் முறையாக நிறைவேற்றப்படாது என்பதால் ஒப்பந்தத்தை உணர்த்துவதாக சோனி தெரிவித்துள்ளது.
ஜீ மற்றும் சோனி நிறுவனங்களின் இணைப்பு கிட்டத்தட்ட 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாகும். பல மாதங்களாக ஜீ சோனி இணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சோனி விலகி உள்ளது. இதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சோனி வெளியிட்டுள்ள விலகல் கடிதத்தில், ‘டிசம்பர் மாதத்தோடு இணைப்புக்காக கொடுக்கப்பட்ட கெடு நிறைவடைந்துவிட்டது. எனவே, ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக’ குறிக்கப்பட்டுள்ளது.