ஜப்பானைச் சேர்ந்த பிரபல மின்னணு நிறுவனமான சோனி, தனது தலைவராக, நிறுவனத்தில் பணியாற்றிய நிதி அதிகாரியை நியமித்துள்ளது. நெடு நாட்களாக சோனி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஹீரோகி டொடோகி, நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்பார் என்று செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது, சோனி நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தலைமை அதிகாரியாக கெனிச்சிரோ யொஷிடா உள்ளார். அவர் தொடர்ந்து இதே பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யொஷிடா, கடந்த ஆண்டு சோனி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் குறிப்பிட்ட சில மாற்றங்களை பரிந்துரை செய்திருந்தார். அதற்கான ஒப்புதல் இன்று பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பகுதியாக, நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கும் டொடோகி, இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளை சமூகத்திற்கு வழங்குவதற்காகவும் பணி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.














