ப்ளே ஸ்டேஷன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் சோனி

February 28, 2024

சோனி நிறுவனம் தனது வீடியோ கேம் பிரிவில் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. ப்ளே ஸ்டேஷன் பிரிவில் கிட்டத்தட்ட 900 பேர் நீக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 8% ஆகும். அத்துடன், லண்டனில் செயல்பட்டு வரும் ப்ளே ஸ்டேஷன் குழு ஒன்றை நீக்குவதாக கூறியுள்ளது. பல மாதங்களாக, பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாக, இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் வீடியோ கேம் கிளை நிறுவனமான கொரில்லா கேம்ஸ், […]

சோனி நிறுவனம் தனது வீடியோ கேம் பிரிவில் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. ப்ளே ஸ்டேஷன் பிரிவில் கிட்டத்தட்ட 900 பேர் நீக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 8% ஆகும். அத்துடன், லண்டனில் செயல்பட்டு வரும் ப்ளே ஸ்டேஷன் குழு ஒன்றை நீக்குவதாக கூறியுள்ளது.

பல மாதங்களாக, பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் விளைவாக, இந்த பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியின் வீடியோ கேம் கிளை நிறுவனமான கொரில்லா கேம்ஸ், 40 பேரை அதாவது 10% ஊழியர்களை நீக்க உள்ளது. மேலும், பல்வேறு கிளை நிறுவனங்களிலும் பணி நீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு, இந்த மாற்றங்கள் அவசியமானது என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu