வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை வெவ்வேறு போன்களுக்கு பேக்கப் இல்லாமல் மாற்றலாம் - புதிய வசதி அறிமுகம்

அண்மையில், 4 ஃபோன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, வெவ்வேறு போன்களில் சாட் ஹிஸ்டரியை பரிமாறும் புதிய அம்சத்தை கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம், கூகுள் டிரைவில், வாட்ஸ்அப் சாட்டுகளை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இந்த புதிய அம்சம், தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, […]

அண்மையில், 4 ஃபோன்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, வெவ்வேறு போன்களில் சாட் ஹிஸ்டரியை பரிமாறும் புதிய அம்சத்தை கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம், கூகுள் டிரைவில், வாட்ஸ்அப் சாட்டுகளை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

இந்த புதிய அம்சம், தற்போது பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு, க்யூ ஆர் கோடு அடிப்படையில் சாட் ஹிஸ்டரிகள் பரிமாறப்படும். அனைத்து வித சோதனைகளும் நிறைவேறிய பின்னர், பொதுமக்களுக்கு இந்தப் புதிய அம்சம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 320

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu