வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்ப இணைய வசதி தேவையில்லை - புதிய மேம்படுத்தல் வசதி அறிமுகம்

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அந்த வரிசையில் புதிதாக, இணைய வசதிகள் இல்லாமல் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. இது பற்றிய விரிவான தகவல்கள் WABetaInfo தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாமல் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஷேர் இட் போன்ற செயலிகள் இயங்கி வருகின்றன. இதே போன்ற சேவையை வாட்ஸ் அப் தளம் […]

பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ் அப் கொண்டு வருகிறது. அந்த வரிசையில் புதிதாக, இணைய வசதிகள் இல்லாமல் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. இது பற்றிய விரிவான தகவல்கள் WABetaInfo தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் இணைய வசதி இல்லாமல் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இதன் அடிப்படையில் ஷேர் இட் போன்ற செயலிகள் இயங்கி வருகின்றன. இதே போன்ற சேவையை வாட்ஸ் அப் தளம் கொண்டு வர உள்ளது. வாட்ஸ் அப்பில் ப்ளூடூத் தொழில்நுட்பம் மூலம் பகிரப்படும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டு பரிமாற்றப்படுவதால் அதிக பாதுகாப்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அம்சம் பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல், இணைய வசதி இல்லாமல், வாட்ஸ் அப்பில் புகைப்படங்களை பகிரலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu