உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 26வது லீக்காட்டம் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது.உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டம் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறுகிறது. சென்னையில் உள்ள என்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் அணி இனி ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட அறை இறுதியில் நீடிக்க முடியாது. ஏதேனும் ஒரு ஆட்டத்திலும் தோற்றாலும் பாகிஸ்தான் அணி வெளியேற வேண்டும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 82 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்ததில் 51 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவும் 30 ஆட்டத்தில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லை. இதுவரை உலக கோப்பையில் ஐந்து ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், இரண்டில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.