உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.
கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அறை இறுதி ஆட்டம் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெறுகிறது. இதுவரை தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளிடம் மட்டுமே தோல்வி அடைந்து 7 வெற்றிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.ஆஸ்திரேலியா அணி இரண்டு தோல்விகளை சந்தித்த பின் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி டிக்காப் மற்றும் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். தற்போது மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.