உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காள தேசம் அணிகள் மோதியதில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் இடையே வான்கடே மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தென்னாப்பிரிக்கா 50 ஓவர் வடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களம் இறங்கிய வங்காளதேசம் அணியின் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க மந்த நிலை நீடித்து வந்தது. இதில் சிறப்பாக விளையாடிய அஹமதுள்ளா 113 ரங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியில் 46.4 ஓவர் முடிவில் வங்காளதேசம் அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் அணி தனது சுமார் ஆன ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 283 ரன்கள் எனும் இலக்கு நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இதில் ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.














