உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி போராடி வெற்றி பெற்றுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா இடையே உலககோப்பை தொடரின் 26வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் அரை சதம் அடித்தார் அவுட்டானார். ஆட்டத்தின் 46.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இதில் அய்டன் மார்க்ராம் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் 47.2 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.














