தென்கொரியாவில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
தென்கொரியாவில் உள்ள ஜியோங்கி மாகாணத்தில் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது 67 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். மீட்பு படையினர் வந்து ஊழியர்களை மீட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. சில ஊழியர்களின் நிலை என்ன என்பது குறித்து விவரம் தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கருதப்படுகிறது.