தென் கொரியாவில் நாய் இறைச்சிக்குத் தடை

January 10, 2024

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அல்லது கொல்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக்கும். இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 208 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு வாக்கு கூட எதிர்த்து பதிவாகவில்லை. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாய் இறைச்சி தொழில் […]

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் நாய்களை இறைச்சிக்காக வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது அல்லது கொல்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக்கும். இதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் வழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 208 வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு வாக்கு கூட எதிர்த்து பதிவாகவில்லை. அரசின் இந்த நடவடிக்கைக்கு நாய் இறைச்சி தொழில் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் தென்கொரியாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நாய் இறைச்சி உண்பதில்லை என்று சமீப காலத்தில் கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்தது. இதனை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu