தென்கொரியாவில் மருத்துவர்களின் உரிமைகளை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெறுவதாக அரசு முடிவு செய்துள்ளது.
தென்கொரியாவில் மருத்துவர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை சமாளிக்க மருத்துவ கல்லூரிகளில் 2035-க்குள் 10 ஆயிரம் இடங்களை உயர்த்த அரசாங்கம் அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் அவ்வளவு மாணவர்களை கையாளக்கூடிய கட்டமைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மருத்துவ சேவையின் தரம் குறையும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். அதோடு அரசின் இந்த முடிவை எதிர்த்து 8000 பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் போதிய சிகிச்சை கிடைக்க பெறாமல் அவதி உற்றனர். எனவே அரசு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தியது. அப்படி அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இருந்தபோதிலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவாக மருத்துவர்களின் உரிமைகளை ரத்து செய்யும் முடிவை திரும்ப பெறுவதாக அரசு முடிவு செய்துள்ளது. இதனை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சோ கியோ சாங் தெரிவித்தார்.