தென்கொரியா: விளையாட்டுகளை முடக்கியதால் கூகுள் நிறுவனத்திற்கு 32 மில்லியன் டாலர்கள் அபராதம்

April 11, 2023

தென் கொரியாவைச் சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம், கூகுள் நிறுவனத்திற்கு 31.88 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது போட்டியாளர் தளத்தில் மொபைல் வீடியோ கேம்களை தடை செய்ததாகவும், ஆன்லைன் விளையாட்டுகளை முடக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வண்ணம், கூகுள் இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவை சேர்ந்த உள்நாட்டு கேமிங் தளத்தின் வருவாய், மதிப்பு ஆகியவற்றை கூகுள் பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2016 முதல் […]

தென் கொரியாவைச் சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம், கூகுள் நிறுவனத்திற்கு 31.88 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது போட்டியாளர் தளத்தில் மொபைல் வீடியோ கேம்களை தடை செய்ததாகவும், ஆன்லைன் விளையாட்டுகளை முடக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வண்ணம், கூகுள் இதுபோன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த உள்நாட்டு கேமிங் தளத்தின் வருவாய், மதிப்பு ஆகியவற்றை கூகுள் பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2016 முதல் ஏப்ரல் 2018 வரை, ஒன்ஸ் ஸ்டோர் எனப்படும் தென்கொரிய நிறுவனத்தின் வீடியோ கேம்களை கூகுள் பிளே தளத்தில் மட்டுமே வெளியிடும்படி நிர்பந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நெக்ஸான், நெட் மார்பில், என் சி சாஃப்ட் போன்ற நிறுவனங்களும் கூகுள் நிறுவனத்தால் பாதிப்படைந்துள்ளதாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu