தென்கொரியாவில் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
தென்கொரியாவில், 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை வெளியிட்டன. மக்களின் எதிர்ப்பால், அதிபர் அவசர நிலையை வாபஸ் பெற்றார். பின்னர், எதிர்க்கட்சிகள் பதவிநீக்கம் தீர்மானம் தாக்கல் செய்தன. ஆனால் ஆளுங்கட்சியின் வாக்களிப்பின்மையால் அது தோல்வியடைந்தது. பிறகு, 2-வது முறையாக பதவிநீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, 204 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் யூன் சுக் இயோல் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். இன்று, அவரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் 192-0 என்ற வாக்கெடுப்பில் நிறைவேறி, ஹான் டக்-சூ பதவிநீக்கம் செய்யப்பட்டார்.