அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா கடற்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி

April 4, 2023

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் வடகொரியாவை எதிர்த்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த நாடுகளின் கடற்படைகள் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த நாடுகளின் ராணுவ ஒத்திகையை எதிர்த்து வட கொரியா ஏவுகணை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடற்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி 2 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தகவல் பரிமாற்றம், தேடுதல் மற்றும் […]

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் வடகொரியாவை எதிர்த்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த நாடுகளின் கடற்படைகள் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்த நாடுகளின் ராணுவ ஒத்திகையை எதிர்த்து வட கொரியா ஏவுகணை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடற்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி 2 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு பயிற்சிகள், தகவல் பரிமாற்றம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் யூ எஸ் எஸ் நிமிட்ஸ் என்ற விமான தாங்கி போர்க்கப்பல் உட்பட பல்வேறு போர்க்கப்பல்கள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu