தென்கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் மேலும் சரிவு

February 29, 2024

உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதத்தில் தென்கொரியா கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் தென்கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, தென்கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் 0.78 ஆக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் 0.72 ஆக குறைந்துள்ளது. தென் கொரிய பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வேலை சார்ந்த முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அத்துடன், குழந்தை […]

உலக அளவில் குழந்தை பிறப்பு விகிதத்தில் தென்கொரியா கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டில் தென்கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, தென்கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் 0.78 ஆக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டில் 0.72 ஆக குறைந்துள்ளது. தென் கொரிய பெண்கள் தங்கள் தொழில் மற்றும் வேலை சார்ந்த முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அத்துடன், குழந்தை வளர்ப்புக்கு அதிக செலவாகுவதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக, குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது அல்லது தவிர்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. சராசரியாக, சீரான மக்கள் தொகை நிலவுவதற்கு குழந்தை பிறப்பு விகிதம் 2.1 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால். கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள தென்கொரிய குழந்தை பிறப்பு விகிதம் 2024 ஆம் ஆண்டில் 0.68 ஆக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu