தென்கொரிய ராணுவ மந்திரி கிம் யாங் ஹியூன் தற்கொலைக்கு முயற்சித்தார்.
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், கடந்த 3-ந்தேதி திடீரென ராணுவ அவசர நிலையை அறிவித்தார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு பின், அவசர நிலையை அவர் வாபஸ் பெற்றார். ராணுவ மந்திரி கிம் யாங் ஹியூன் அவசர நிலையை அறிவிக்க தூண்டுதலாக இருந்ததாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சியோலின் சிறையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவசர நிலையை அறிவித்தபின், கழிவறைக்கு சென்ற அவர் தற்கொலைக்கு முயற்சித்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில், அதிபர் யூன் சுக் இயோல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திரட்டப்பட்டு, விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.














