தென்கொரியாவில், பொதுமக்கள் தங்கள் வயதை கணக்கிடும் பாரம்பரிய முறை கலைக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச முறைப்படி வயதை கணக்கிடும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென்காரிய மக்களின் வயது 1 முதல் 2 வயது வரை குறைகிறது. எனவே, தென் கொரிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்கொரியாவில், ஒரு குழந்தை பிறக்கும் போதே, அதன் வயது 1 என கணக்கிடப்படுகிறது. அதாவது, தாயின் கருவறையில் இருக்கும்போதே குழந்தையின் வயது எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. எனவே, சர்வதேச முறையுடன் ஒப்பிடுகையில், தென்கொரிய மக்களின் வயது கணக்கு ஓராண்டு கூடுதலாக இருக்கும். தற்போது, இந்த பாரம்பரிய முறை கலைக்கப்பட்டு, சர்வதேச முறை செயல் செயல் படுத்தப்பட்டுள்ளதன் மூலம், இதுவரை நிலவி வந்த வயது குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வேலை வாய்ப்பு, இழப்பீடுகள் சார்ந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளதால், 70% மக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.