2 ஆண்டுகளுக்கு பின், முதல் முறையாக தென் கொரியாவின் ஏற்றுமதி சரிவு

October 28, 2022

உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், தென் கொரியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியா ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் 2.7% ஏற்றுமதி குறைவு பதிவாகி இருந்தது. தற்போதைய நிலையில், 3% ஏற்றுமதி குறைவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி, இந்த சரிவு உணரப்படுகிறது. தென்கொரியாவில் இருந்து அதிக அளவில் பொருட்களை இறக்குமதி செய்யும் […]

உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், தென் கொரியாவின் ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியா ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வருட அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் 2.7% ஏற்றுமதி குறைவு பதிவாகி இருந்தது. தற்போதைய நிலையில், 3% ஏற்றுமதி குறைவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி, இந்த சரிவு உணரப்படுகிறது.

தென்கொரியாவில் இருந்து அதிக அளவில் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக சீனா இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், தென் கொரியாவுக்கு 16.3% வர்த்தக இழப்பு நேரிட்டுள்ளது. எனவே, அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில், தென் கொரியாவின் ஏற்றுமதி 5.5% குறைந்துள்ளது. ஏற்றுமதி குறைந்து வரும் அதே வேளையில், இறக்குமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 7.2% உயர்வு காணப்படுகிறது. எனவே, ஏற்றுமதி - இறக்குமதி இடையிலான வர்த்தகச் சமன்பாடு குலைந்துள்ளது. இது 14 வருடத்தில் பதிவாகி உள்ள உச்சபட்ச மதிப்பீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தென் கொரியாவின் வருடாந்திர பணவீக்கம் 5.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 6.3 சதவீதமாக, பணவீக்கம் உச்சத்தை எட்டி இருந்தது. அதிலிருந்து மீது, தற்போது, பணவீக்கம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu