தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அவசரநிலை ராணுவச் சட்டத்தை செவ்வாய்க்கிழமை அமல்படுத்தியதுக்கு எதிராக, அவரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்தன. 300 உறுப்பினர்களுள்ள நாடாளுமன்றத்தில் 173 இடங்கள் கொண்ட ஜனநாயகக் கட்சியும், 19 உறுப்பினர்களுடன் சிறு கட்சிகளும் இணைந்து தீர்மானம் முன்வைத்துள்ளன. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் வெற்றி பெறும். வரும் வெள்ளிக்கிழமை (டிச. 6) இந்த வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














