தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரஷ்யா உதவும் - அதிபர் புடின்

September 30, 2023

தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா உதவும் என அதிபர் புடின் கூறினார். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் சூடானிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. முதல் முறையாக அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிபர் சல்வா கீர் ரஷ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு அதிபர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை […]

தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா உதவும் என அதிபர் புடின் கூறினார். ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் சூடானிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. முதல் முறையாக அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிபர் சல்வா கீர் ரஷ்யாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்கு அதிபர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷ்யா உதவும் என புடின் கூறினார். மேலும் வர்த்தகம், எரிசக்தி மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பது என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu