தமிழகத்தில் கனமழை காரணமாக திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் ஒத்திவைப்பு.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்யும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக, திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, புதிய தேதியை பின்னர் அறிவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.